செஞ்சி சட்டமன்றத் தொகுதி 19-11-2017 நிகழ்வுகள்:

66

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் ஆர்ப்பாட்டம், கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வுகள் நடைபெற்றது.

விழுப்புரம்: செஞ்சி தொகுதியில் வருகிற 15-12-2017 அன்று ‘ஈகைத் தமிழன் அப்துல்ரவூப் நினைவேந்தல் பொதுக்கூட்டம்’ நடத்துவது தொடர்பாக, 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட கலந்தாய்வு, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் செஞ்சியில் உள்ள கோனேரிக்கோன் கோட்டையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் விழுப்புரம் மாவட்ட அனைத்து தொகுதி பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்திய கடலோரக் காவல்ப்படை தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து செஞ்சி தபால் நிலையம் எதிரில் மாலை 3மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் ஜோசப் தொகுதி கொள்கை பரப்பு செயலாளர் அவர்கள் கண்டனவுரையாற்றினார்கள். தலைமை கிருஷ்ணன் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், முன்னிலை சுகுமார் தொகுதிச் செயலாளர், வெங்கடேசன் தொகுதித் தலைவர், சக்திவாசன் இளைஞர் பாசறைச் செயலாளர், ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு தமிழ்முன்அன்சர் தொகுதி துணைச் செயலாளர், தாமு.பிரியா மகளிர் பாசறைச் செயலாளர் மற்றும் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செஞ்சி தொகுதிக்குட்ப்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாலை 6மணிக்கு நடைபெற்றது. தலைமை கிருஷ்ணன் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், முன்னிலை சக்திவாசன் இளைஞர் பாசறை செயலாளர், தமிழ்முன்அன்சர் தொகுதி துணைச் செயலாளர், சுந்தர் தொகுதி துணைத் தலைவர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சுகுமார் தொகுதிச் செயலாளர், வெங்கடேசன் தொகுதித் தலைவர், தாமு.பிரியா மகளிர் பாசறைச் செயலாளர் மற்றும் தொகுதியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சிறப்புரை: இடும்பாவனம் கார்த்திக் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், ஜோசப் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர்.

முந்தைய செய்திசுற்றறிக்கை: குருதிக்கொடை முகாம்கள் நடத்த திட்டமிடுதல் தொடர்பாக
அடுத்த செய்திஅறிவிப்பு: தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் – வில்லிவாக்கம்