மருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி

178

மருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி

இன்று 03-08-2018 காலை கொங்குநாட்டுக் குறிஞ்சி நிலமாம் மருதமலை அடிவாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, வீரத்தமிழர் முன்னணி சார்பாக மருதமலை தூய்மைப்பணிகள் (உழவாரப்பணி) மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றன.

நோக்கம்:
மருதமலை சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும். மண் வளத்தைக் கெடுத்து மரங்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கும், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் மட்காத நெகிழிக்கழிவுகளை தூய்மை செய்தும் வன விலங்குகளின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய பழ மரங்கள் நடுவது உயிர் காற்றையும் நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்கும் மரங்களை உருவாக்குவது நம் கடமையும் நோக்கமும் ஆகும்.

செய்த பணிகள்

அடிவாரம் முதல் மலையின் பாதி தூரம் வரை படிக்கட்டுகளின் இருபுறமும் வாகனங்கள் செல்லும் மலைப்பகுதிகளிலும் இருந்த நெகிழிக்கழிவுகள் ( நெகிழிப்பை, டம்ளர், கண்ணாடி குவளைகள், ஆணுறைகள், குழந்தை மலப்பை) போன்றவற்றை தூய்மை செய்து 1000 கிலோ அளவு இருந்த குப்பைகள் சேமித்து மாநகராட்சியிடம் கொடுக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பொதுமக்களுக்கு நெகிழிப்பையின் பாதிப்பை விளக்கும் விதமாக, அவர்கள் கொண்டுவந்த நெகிழிப்பைக்கு மாற்றாக 300க்கும் மேற்பட்ட துணிப்பை கொடுக்கப்பட்டது. பழங்கள் கொடுக்கும் மரங்கள் உயிர் காற்று கொடுக்கும் மரங்கள் நடப்பட்டது.

களமாடிய உறவுகள்:

களப்பணிகளுக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் தொடக்கம் முதல் இறுதி வரை உறுதுணையாக இருந்த வீரத்தமிழர் முன்னணி பொருப்பாளர் மருதமலை எழில்பாண்டியன், சுற்றுச்சூழல் பாசறை கிணத்துக்கடவு ஒருங்கிணைப்பாளர் ஐயா ரூபன் அவர்களுக்கும் தூய்மைப்பணிக்கான கருவிகளைக் கொடுத்து உதவிய நண்பர் மணிகண்டன், துணிப்பை, குப்பை எடுக்கும் பை அளித்த மருதமுத்து, சுத்தம் செய்யும் பொடி கொடுத்த அரிமா முருகேசன், குப்பை சேகரிக்கும் பை கொடுத்த தோழர் மீனாட்சி சுந்தரம், முகக்கவசம், கையுறை வழங்கிய 44வது பகுதி முருகேசு, மண்சட்டி அளித்த வடவள்ளி கவாஸ்கர், உணவளித்த முனைவர் சந்திரசேகர் அவர்களுக்கும் பண உதவி செய்த மனிதஉரிமை நண்பர் ராஜ்குமார், மருத்துவர் பாசறை ஐயா பாலசுப்ரமணியம், வடவள்ளி சுகுமார், ஐயா மணி ஆனந்தன், ஐயா சந்தோஷ் ராமகிருஷ்ணன், ஐயா இளங்கோ, ஐயா ரூபன் தமிழன், வடவள்ளி கதரகம், ஐயா பாலசுப்ரமணியம் மற்றும் பலர்.

தூய்மைப்பணியில் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய 18 சித்தர் கோவில் நிறுவனர் ஐயா கருத்தபாண்டியன், கோவை மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலேந்திரன், வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கினைப்பாளர் ஐயா அருண்ரங்கராசன், மாநில மருத்துவர் பாசறை ஐயா பாலசுப்பிரமணியன், மாநில இளைஞர் பாசறை ஐயா விசயராகவன், மாநில இளைஞர் பாசறை பேராசிரியர் ஐயா கல்யாணசுந்தரம், மகளிர் பாசறை நர்மதா, அரிமா முருகேசன், வீரத்தமிழர் முன்னணி ஐயா அகரன், சிங்கை சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளவல் சுபாசு, கிஷார், சூலூர் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், கவுண்டம்பாளையம் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர ஐயா தனபால், வால்பாறை சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் இளவல் பாலாஜி சூலூர் பாண்டியராசன், கோவை வடக்கு இளவல் சம்பத், 20 வது பகுதி ஆனந்த் , இளைஞர் பாசறை இயற்கை ஆர்வலர் சிவக்குமார் 44வது பகுதி முருகேசு, சுகுமாரன், சரண், கோவைப்புதூர் டேனியல், சிறுமுகை மூர்த்தி, இடையர்பாளையம் அண்ணன் பாலாஜி , அண்ணன் மருதமுத்து, சிங்கை தோழர் பாக்கியராசு, குனியமுத்தூர் ஐயா சித்திக், முனைவர் சந்திரசேகர் அவர்கள், கிணத்துக்கடவு தொகுதி சார்பாக கலந்து கொண்ட லோகநாதன் ஐயா, தோழர் சிவக்குமார், தோழர் சீனிவாசன், சண்முகசுந்தரம் , தம்பி செல்வேந்திரன், தம்பி கார்த்திகேயன், திரு சந்தோஷ் இராமகிருஷ்ணன், குழந்தைகள் : ராகவி, . வசீகரன், சீ.நிதின் , சூலூர் விஷ்ணு பாரதி அனைவருக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துக்கள்.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்றாள் நம் தண்டமிழ் மூதாட்டி. இங்கு நல்லார் ஒருவரல்லர் பலர். ஆகவே ஐயுற வேண்டா வான்முகில் வழாது பெய்யும், மலிவளம் சுரக்கும், மன்னன் கோண்முறை அரசு செய்வான், குறைவிலாது உயிர்கள் வாழும்.

ஏ.ச. ராஜசேகர்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சுற்றுச்சூழல் பாசறை
கோவை

முந்தைய செய்திமகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசுற்றறிக்கை: திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்