அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

148

அப்துல்கலாம் 2ஆம் ஆண்டு நினைவைப்போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (28-07-2017) | நாம் தமிழர் கட்சி

தமிழ் அறிவியலின் பெருமைமிகு அடையாளம் நமது ஐயா அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவரது நினைவைப்போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ஆவடி நகராட்சி அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லதம்பி தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் ஆவடி பாபு வரவேற்று பேசினார். மாவட்ட நிர்வாகிகள் ஏகாம்பரம், சரவணன், முருகன், சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலைக்கோட்டுதயம், அன்புத்தென்னரசன், களஞ்சியம் சிவக்குமார், கதிர் ராஜேந்திரன், ஆன்றோர் அவையம் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுச்செல்வன், மகேந்திரன் மாநில செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார்,  மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்தி, சாரதி ராசா, கிருஷ்ணன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வின் நடுவே கனத்தமழை பெய்தாலும் நிகழ்ச்சி தடைபடாமல் கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்றது.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆவடி சந்தையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியேற்றி வைத்தார். மேலும் அப்துல்கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்குச் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்.

[WRGF id=48329]

இறுதியாக  கொட்டும் மழையில் நனைந்தபடியே சீமான் எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திநாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கமுதி
அடுத்த செய்திநாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை