கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.

44

கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாடி பகுதி ஒருங்கிணைப்பாளார்.
வரவேற்ப்புரை திரு. ராமகிருட்டிணன் அவர்கள் ஒன்றிய செயலாளார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் :
தமிழ் முழக்கம் சாகுல்அமீது மாநில ஒருங்கிணைப்பாளார்

வரலாற்று முழக்கம் அன்புதென்னரசன் மாநில ஒருங்கிணைப்பாளார்
பேரா. கல்யாணசுந்தரம் மாநில இளைஞார் பாசறை ஒருங்கிணைப்பாளார்
பேரா. பா. ஆனந்த் மாவட்ட செயலாளார்
ஆகியோர் எழுச்சியுரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பந்தலூர் நகர செயலாளார் திரு. மோகன்தாஸ், மாவட்ட தலைவார் திரு ஜார்ஜ், மாவட்ட பொருளாளார் திரு. சிவகுமார், கூடலூர் நகர செயலாளார் திரு.பைந்தமிழ்பாரதி, கூடலூர் ஒன்றிய செயலாளார் திரு கார்மேகம், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளார் பாலசுப்பரமணியம், சரவணன், சசிகுமார், உதகை சட்டமன்ற பொருப்பாளார் திரு. எட்வின், மாவட்ட மாணவ பாசறை ஒருங்கிணைப்பாளார் கார்த்திக், யுவராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

1. 7 பேர் விடுதலையே இனத்தின் விடுதலை இவர்களை விடுதலை செய்வதற்கு காத்திருக்கும் தமிழக முதல்வர்கு நாம் தமிழர் கட்சியின் மனமார்ந்த நன்றி. இதை தடுக்க நிணைக்கும் (காங்கிரஸ்); மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

2. சேரம்பாடி உயர்நிலை பள்ளி தரம் உயர்த்த ஆசிரியர் நியமித்து செயல்படுத்த வேண்டும்

3. பந்தலூர் தாலூக்கா மருத்து வமனையை நவீன மயமாக்கி 24 மணிநேரம் செயல்படுத்த வேண்டும்.

4. எல்லை பகுதியில் எல்லா சோதனை சாவடிகளும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

5. சேரம்பாடி சாலை ஒரங்களில் குடி இருக்கும் சுமார் 50 கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கவும் வீடுதலம் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. அண்ணாநகர் சோரஞ்சால் பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் 150 குடும்பங்கள் வசித்து வருகிறது சேரங்கோடு ஊராச்சி இதற்க்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சேரம்பாடி கடை வீதி பகுதியில் இருக்கும் பழைய பஞ்சாயித்து கட்டிடத்தை இடித்து பேருந்து நிலையம் கட்டி மேல்தளத்தில் திறந்த வெளி மேடை அமைக்கவும் இக்கூட்டதில் வலியுரத்தபட்டது.

8. வேன்லெர்த் தேயிலை எஸ்டேட்டில் 50 வருடம் மேலா பணிப்புரியும் தொழிலாளிகளை அவர்கள் குடி இருக்கும் வீடுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

9. தமிழக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்ப்படுத்தி கேரளா கேபிள் டிவி சேனலை தடுத்தி நிருத்தி தமிழக அரசின் கம்பிவட இணைப்பை வழங்கவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

10. தாய் சோலை பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும்.

11. தப்பத்தோடு புஞ்சை கொல்லி பகுதியில் சாலை வசதி குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

12. நெல்லியாளம் நகராட்சில் 20 வார்டில் மலை மேம்பாட்டுதிட்டதில் கீழ் ரூ 1000000 தொகையில் அமைத்து கொடுக்க வேண்டிய தார் சாலை உடனடியாக மாற்று ஒப்பந்ததாரை நியமித்து சாலை அமைக்க வேண்டும்.

இறுதியில் நன்றியுறை அசோக் இளைஞர் பாசறை.

முந்தைய செய்திநாம் தமிழர் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசித் தாக்குதல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியும் உலகத் தமிழர் பேரமைப்பும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம்.