வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு

45

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி நடத்தும் ‘கிராமப் பூசாரிகள் மாநாடு’  ஆகத்து 30 அன்று திருப்பூரிலுள்ள காங்கேயம் சாலை, பத்மினி தோட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாபிலிருந்து பேராசிரியர் ஜக்மோகன் சிங் கலந்து கொள்கிறார். மேலும், பஞ்சாபிலிருந்து சீக்கிய இனச் சொந்தங்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.

 

மாலை 04.30 மணிக்கு பறை இசையுடன் மாநாடு தொடங்குகிறது.

05.00 மணிக்கு  ‘மார்சல் ஆர்ட்ஸ்’ சீக்கிய வீரக்கலை நிகழ்வு நடக்கிறது.

05.50 மணிக்கு வேல்வீச்சு இதழ் வெளியீடு நடக்கவிருக்கிறது.இதழின் முதல் பிரதியை பேராசிரியர் ஜக்மோகன் சிங் வெளியிட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி சந்திரசேகர் பெற்றுகொள்கிறார்.

மாலை 06 மணிக்கு ஆய்வுரை தொடங்குகிறது. இதில் ஆய்வறிஞர்கள் உரையாற்றுகிறார்கள்.

‘சாதியக்கூர்மையும், தமிழ்த்தேசிய ஓர்மையும்’ என்ற தலைப்பில் மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் உரை நிகழ்த்துகிறார்.

‘தமிழர் மெய்யியலின் சித்தர்களின் பங்கு’ என்ற தலைப்பில் மருத்துவர் செவ்வேள்வானவரம்பன் உரை நிகழ்த்துகிறார்.

‘தீந்தமிழ் மரபியல் சடங்குகளில் மருத்துவம்’ என்ற தலைப்பில் புதின் சுரேஷ் உரை நிகழ்த்துகிறார்.

‘தமிழர்குலதெய்வ வழிபாடும், ஆரியக்கலப்பும்’ என்ற தலைப்பில் ஆய்வறிஞர் சுந்தரவந்தியத்தேவன் உரை நிகழ்த்துகிறார்.

‘சிவன் யார்?’ என்ற தலைப்பில் தமிழ்-தமிழர் இயற்கை ஆய்வாளர் மூ.நா.பா.தமிழ்வாணன் உரை நிகழ்த்துகிறார்.

‘பைந்தமிழும், பைந்தமிழர் வழிபாடும்’ என்ற தலைப்பில் செந்தமிழ் ஆகம அந்தணர் இறைநெறி இமையவன் உரை நிகழ்த்துகிறார்.

இரவு 08.30 மணிக்கு மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

இறுதியாக 08.40 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மரபியல் மீட்சியுரை நிகழ்த்துகிறார்.

வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களான செந்தில்நாதன் சேகுவேரா, ஒட்டக்கூத்தன், பூலித்தேவன், வெற்றிவேல் பாண்டியன், சிவராமன், பாரிசாலன், கலை ஆகியோர் மாநாட்டு நிகழ்ச்சியினை ஒருங்கிணைக்கின்றனர்.

முந்தைய செய்திஈரோடை கிழக்கு ,தெற்கு – சார்பாக கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திகிராமப் பூசாரி மாநாட்டுத் தீர்மானங்கள்