சுற்றறிக்கை: நாம் தமிழர் உறவுகள் மீதான தொடர் வழக்குகளை எதிர்கொள்ளுதல் தொடர்பாக

26

சுற்றறிக்கை: நாம் தமிழர் உறவுகள் மீதான தொடர் வழக்குகளை எதிர்கொள்ளுதல் தொடர்பாக

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக முதலில் ஒலிக்கும் குரலாகவும், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உயரும் முதல் கரமாகவும், போராட்டக் களத்தில் மக்களோடு துணைநிற்கும் முதல் ஆளாகவும் நாம் தமிழர் கட்சியினர் இருப்பதால் நம் மீது மத்திய, மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. எந்தப் பகுதியில் கட்சி நிகழ்வை முன்னெடுத்தாலும் அதற்கு அனுமதி மறுப்பதும், கடைசிநாள் வரை அலைகழிப்பதும், முதலில் அனுமதி கொடுப்பதும் நிகழ்விற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்த பின்னர் இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பதும், கட்சிப் பதாகைகள், சுவரொட்டிகளைக் கிழிப்பதும், சிறு காரணங்களுக்குக்கூட பெரிய வழக்குகள் பதிவதும் அதற்காக சிறைப்படுத்துதல், குடும்பத்தினரை மிரட்டுதல் போன்ற பல நெருக்கடிகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நமது கட்சி மீது தொடுக்கப்படும் மறைமுகப் போரை சட்டத்தின் மூலமாக திறம்பட எதிர்கொள்ள நமது கட்சியின் வழக்கறிஞர் பாசறை முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளது. ஆயினும் வழக்கு செலவுகளை எதிர்கொள்வதில் கடும் நிதிநெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதுபோன்ற நிதி நெருக்கடியால் ஒரே நேரத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் தொய்வு ஏற்படுகிறது. நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சிறு நிதியுதவியை வழங்குவதன் மூலம் நம் கட்சி மீதான அடக்குமுறையை சட்டப்போராட்டத்தின் வாயிலாக முறியடிக்க இயலும் என்பதையுணர்ந்து இனமானப் பணியாற்றுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இணையதளம் வாயிலாக நிதி வழங்க: http://www.naamtamilar.org/donate-us/

வங்கி கணக்கு விவரம்:
Account Name: Naam Tamilar Katchi
Account Number: 916020049623804
Bank Name: Axis Bank
IFSC code: UTIB0002909 | MICR Code: 600211076 | SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai – 600095.
( Contributor shall be an Indian citizen either living in India or abroad (NRIs with valid Indian passport). Only Indian Citizens can donate as per Indian law.)


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு – சீமான் பங்கேற்பு
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: சீமான் கண்டனம்