பிரபாகரனின் மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தனர் – றொபேட்ஸ்

390

2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்ததாக தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். புதுடில்லியில், நடந்த சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்தும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்போதே தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் மேற்கண்டவாறான குற்றச்சாட்டை தெரிவித்தார். இதில் கருத்து வெளியிட்ட, உலகளவில் பிரபலமான, தி எக்கனோமிஸ்ட் இதழின், தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான, அடம் றொபேட்ஸ் உரையாற்றும் போது,

2009 மே மாதம், போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான, 12 வயதான பாலச்சந்திரனை, இலங்கை இராணுவத்தினரே, படுகொலை செய்ததாக குற்றம்சாட்டினார். போர்க்குற்றவாளிகளான, இலங்கைப் படையினர், படுகொலைகளை நிறைவேற்றிய காணொளிக் காட்சிகளை வெளியிடாதிருந்தால், போரின் முடிவில் சிறைபிடிக்கப்பட்டவர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்றும் அடம் றொபேட்ஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியை தளமாக கொண்டு செயற்படும், பிரித்தானிய ஊடகவியலாளரான, அடம் றொபேட்ஸ், அண்மையில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அழைத்துச் சென்ற இந்திய ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

அவர் அண்மைய வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, இந்தக் கருத்தரங்கில் குறிப்பிடுகையில், அண்மையில் மாகாணசபைத் தேர்தலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்த போது, யாழ்ப்பாணத்தில் வாழும் சாதாரண தமிழ் மக்களிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்ததாகவும், அவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு குறித்த அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவித்தார். இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள மக்களை செவ்வி கண்டதன் அடிப்படையில், 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்த போதிலும், முரண்பாடுகள் தீரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு, ஏஜேகே தொடர்பாடல் ஆய்வு நிலையம், அமைதிக்கும், முரண்பாட்டுத் தீர்வுக்குமான நெல்சன் மண்டேலா நிலையம் என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஈரான், மலேசியா, பங்களாதேஸ், சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான், இலங்கை, பூட்டான், மாலைதீவு, நேபாளம் ஆகிய 12 நாடுகளின் ஊடகவியலாளர்கள், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

முந்தைய செய்திபேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு பதில் மனுவை தடா கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ:
அடுத்த செய்திஇலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டது