மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க வேண்டும்: சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்

183

 

வடக்கில் படையினரால் அழிக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக மீள அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் நேற்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சபை அமர்வுகள் ஆரம்பமானபோது , குறித்த பிரேரணையை சபை உறுப்பினர் சிறிரஞ்சன் முன்மொழிந்தார். “எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதியுத்தத்தின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர். தற்போது எங்களுக்கென வடமாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்கவேண்டும்” என்று தெரித்தார். இந்தப்பிரேரணைக்கு ஈ.பி.டி.பி உறுப்பினரான நகுலன் என்பவர் மட்டும் எதிர்ப்புத்தெரிவித்தார். ஆயினும் மற்றவர்கள் எல்லோரும் ஆதரிக்க தீர்மானம் பெரும்பான்மையோடு நிறைவேறியது.

முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திநீதிக்கான ஒரு விடுதலை வீரனின் சாவு அவன் சாவுடன் நின்று விடுவதில்லை – தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு