Facebook Twitter Youtube

கடைசிப் பாலகனின் இரத்தம் – கண்களில் நீர் வரவழைக்கும் தீபச்செல்வனின் கவிதை!!

கடைசிப் பாலகனின் இரத்தம்

மூட மறுக்கும் பாலகர்களின் கண்களில்
குற்றங்களின் முடிவற்ற காட்சிகள் அசைகின்றன
இறுதியில் எதையோ சொல்ல முயன்றபடியிருக்கும்
மூடாத வாய்களில்
மறைக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஒலிக்கின்றன
இரத்தத்தில் பிறந்து
இறுதிவரையில் இரத்தம் காயாமல்
பிசுபித்தபடி உடல் எங்கும் வழிய
குண்டுகளால்சிதைக்கப்பட்ட பாகங்கள் உதிர
எனது நிலத்து பாலகர்கள் திரிகையில்
இலையான்கள் காயங்களை அரித்து
அவர்களைத் தின்று முடித்தன
எல்லோருடைய கண்களின் முன்பாகவும்
எனது தேசத்திற்கெதிரான போரில்
பாலகர்களை பலியிடும் பொழுது
தாய்மார்களை நோக்கி அவர்கள் அழுகையில்
தாய்மடிகளில் இரத்தம் பெருகியிருந்தது
பெண்குறியிலிருந்து குழந்தைகள்வரை சிதைக்கப்பட
பாலகர்களின் பூமியின் வேர் கருகியது
போர் ஆயுதங்கள் மிகுந்த ரசனையொடு
பாலகர்களை சிதைத்துக் கொன்று தின்றன
ஏங்கும் குழந்தைகளின் கண்களை பிடுங்கி
வார்த்தைகளை அழித்து அவர்கள் இல்லாமல் செய்யப்பட்டனர்
பாலகர்களுக்கு எதிரான போரில்
வேருடன் அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது
பூமி வெளித்துப் போனது
அழிக்கப்படும் தேசத்தில் பிறந்த
ஏதும் அறியாத பாலகர்களைக் கொன்று
இரத்தத்தை உறிஞ்சிப் பருகும் போர்ப்படைகள்
பூமியின் கடைசிப் பாலகனின்
நெஞ்சில் துப்பாக்கிகளால் துளைகளையிட்டு
இரத்தத்தை உறிஞ்சிக் குடித்த பொழுது
எல்லாக் குழந்தைகளும் நிலத்தில் வீழ்ந்து கிடந்தனர்.

தீபச்செல்வன்

நன்றி – உலகத் தமிழ்ச் செய்திகள்

Share

இதர செய்திகள்

  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • மே 18 இன எழுச்சி பொதுக்கூட்டத் துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி வடிவங்கள்.
  • “படைப்போம் புதிய அரசியல் வரலாறு”கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்-27/04/13.
  • தமிழர் தந்தை அய்யா சி ப ஆதித்தனார் சிலைக்கு சீமான் மாலை அணிவித்தார்.
  • கடலூரில் தமிழர் இன எழுச்சி பொதுக்கூட்டம். (18-05-2013)
  • தமிழ், தமிழ் தமிழென்று சொல்லு!! தாய் தமிழுக்கு ஒன்றேன்றால் முன் வந்து நில்லு – செவிமடுக்க வேண்டிய பாடல்!!
  • நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!
  • தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம்
  • நட நட நீ நட நட கட கட தடை கட கட: உணர்வுப் பாடல் – காணொளி இணைப்பு!!
  • ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
  • நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்