Facebook Twitter Youtube

கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் – காணொளி இணைப்பு!!

பாடல் வரிகள்
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்றா முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆச்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்..
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் இழந்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…

வரிகள்: எசு.சே.தாலின்
ஒளிப்பதிவு: வர்ணன் & அமலன்

Share

இதர செய்திகள்

  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 பிரான்சு
  • எம் இனத்தின் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்கும் மக்கள் சக்தியே நாம் தமிழர் கட்சி
  • Seeman Speech in Naam Tamilar Meet on 18-MAY-2013 at Cuddalore
  • SEEMAN IN MAKKAL MUNNAL OF THANTHI TV ON TAMIL EELAM 19-05-2013 (FULL)
  • தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!
  • லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழர் இனவழிப்பு நாள் மே18
  • ஆஸ்ரேலியாவில் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்
  • நார்வே நாட்டில் சீமான் உரையாற்றினார்
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்