லயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு!!

44

இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டியும், தமிழீழ மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் சென்னையில் உள்ள தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் இயக்கத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் 08.03.2013 வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு தமிழின உணர்வாளர்களும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழீழத்திற்கான போராட்டம் தமிழகத்தில் வலுப்பெற்றது வருகின்றது. தற்போது இந்த மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்ற தீயை பற்ற வைத்துள்ளனர். இந்த தீ இதோடு அனைந்துவிடாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் பெரும் தீயாக பரவ வேண்டும்.

அனைவரும் போராட்டத்தில் இரங்க வேண்டும். அப்போதுதான் தமிழீழ மக்களுக்கு விடிவு பிறக்கும். எவ்வளவோ போராட்டங்களுக்கு பிறகு கடைசியாக இந்த மாணவர்கள் தங்களையே வருத்திக்கொண்டு உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு நாம் தமிழர் கட்சி கடைசிவரை ஆதரவாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிழற்படங்கள்:
————–

காணொளி:
————

முந்தைய செய்திஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்
அடுத்த செய்திமாணவர்களின் உண்ணா நிலை போராட்டம்