Facebook Twitter Youtube

[படங்கள், காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேர் தங்களை விடுவிக்ககோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4  பேர் தங்களை விடுவிக்க கோரி 19-4-2011 அன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.  இவர்கள் பல வருடங்களுக்கு முன் சிங்கள இனவெறி ராணுவத்திடமிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள தப்பி தமிழ்நாட்டிற்கு தொப்புள்கொடி உறவுகளின் உதவி நாடி வந்தவர்கள். அப்படி வந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கவைப்பதாக கூறி உண்மையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை பிணையில் விடுவிக்க கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை இவர்கள் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

இதனையடுத்து கடந்த 1-2-2011 அன்று முதல் 8-2-2011 வரை உண்ணாவிரதம் இருந்தபொழுது 5 பேரை மட்டும் விடுவித்துவிட்டு அமலன், ஜெயமோகன் ஆகியோரை பத்து நாட்கள்  கழித்தும் சந்திரகுமரன், கங்காதரன் ஆகியோரை ஒரு மாதம் கழித்து விடுவிப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து உனாவிரத போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் வாக்குறுதியளித்த படி இவர்களை விடுவிக்காததால் அமலன்,ஜெயமோகன்,சந்திரகுமாரன்,கங்காதரன் ஆகியோர் தங்களை விடுவிக்ககோரியும் மேலும், தங்கள் மீதான குற்றங்களுக்கு முறையாக குற்றப்பத்திறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஏதிலிகள் முகாமில் அடிப்படை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் திறந்தவெளி முகாமில் தங்கள் குடும்பத்தாருடன் தங்க வைக்க வேண்டியும்  நேற்று 19-2-2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Share

இதர செய்திகள்

  • Seeman in Makkal Munnal of Thanthi TV – Episode 2 Trailer -Kudankulam Issue
  • Seeman in Sooda Oru Talk (Trailer) – Sathiyam TV
  • தமிழர் பணிப்படை ஊடகவியலாளர் சந்திப்பில் ” சீமான்”(காணொளி இணைப்பு)
  • போர்குற்ற விசாரணையை எதிர்க்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து அதன் நிலைப்பாட்டை மாற்றகோரி 21 /03 /12 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் – காணொளி இணைப்பு!!
  • தினந்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மறைவுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் இரங்கல்
  • சிங்கள அரசாங்கத்துக்கெதிராக உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த வெள்ளை இனத்தவர்கள்!
  • மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பட்டினி போராட்டம்
  • ஐ.நா.பன்னாட்டு விசாரணை,பொது வாக்கெடுப்பு நடத்திட “பெண்கள் தொடர்வண்டி மறியல்”
  • வீரத்தமிழ்பிள்ளை பாலச்சந்திரன் கல்வெட்டுகள் திறப்பு நிகழ்வு..
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழும்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்