சட்டமன்றத்தில் ஒலிக்கட்டும் நாம் தமிழர் குரல்!
வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். மிதமிஞ்சிய திரைக்கவர்ச்சியாலும், மக்களை ஏமாற்றும் வெற்று இலவசத் திட்டங்களாலும் நம் உயரிய கொள்கை-கோட்பாடுகள் மழங்கடிக்கப்பட்டு நிகழ்ந்துவிட்ட அரசியல் பேரிடரில் மாண்புமிக்க சட்டமன்றம் திரையரங்கம் போல கேலிக்கூத்துக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் மண்ணுக்காக, மக்களுக்காக நாம் தமிழரின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவேண்டியது இன்றியமையாத காலத்தேவையாகிறது.
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி, பஞ்சம், ஊழல், இலஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமைக் கொடுமை, அடக்குமுறை. ஒடுக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வளக்கொள்ளை, மது மத போதை இவை ஏதுமற்ற புதியதொரு தேசம் செய்வோம். மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. புரட்சி எப்போதும் வெல்லும் நமது வெற்றி அதைச் சொல்லும். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம். மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! என்ற தத்துவ முழக்கத்திற்கு ஏற்ப அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான புதிய கொள்கைகள், திட்டங்கள், நிலைப்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் வரைவு 2026 முன்வைக்கிறது.

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு! என்ற நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத் தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொண்டு நம்மால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்போம்!
புதியதொரு தேசம் செய்வோம்! ஓர் இனத்தின் பெருங்கனவு | மாத இதழ்
நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “புதியதொரு தேசம் செய்வோம்” ஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்போம்!
